ஐக்கிய தேசிய கட்சிக்குள் இப்படியொரு மோதலா? ஹரின் அம்பலப்படுத்திய உண்மை

Report Print Vethu Vethu in அரசியல்

சமகாலத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் பாரிய மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கட்சியின் தலைமைத்துவம் மற்றும் பிரதமர் வேட்பாளர் தொடர்பில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதுடன், கட்சி துண்டாக உடையும் அபாய நிலையை எட்டியுள்ளது.

ஒரு தரப்பினர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் போதும் மற்றுமொரு தரப்பு சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்பட வேண்டும் என பொது மேடை ஒன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இதனை குறிப்பிட்டார்.

51 வயதை கடந்த கிழவர்கள் துரத்தப்பட வேண்டும். இளம் வயதுடையவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும். ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைவர் ஒருவர் கொண்டு வரப்பட வேண்டும். அதற்கு பொருத்தமான நபர் சஜித் பிரேமதாஸ என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தற்போதைய தலைவரான ரணில் விக்ரமசிங்கவுக்கு 69 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers