மஹிந்தவை தொடர்ந்தும் ஏமாற்றும் ரணில்!

Report Print Vethu Vethu in அரசியல்

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதமராக செயற்பட்ட போது வழங்கப்பட்ட வாகனங்கள் அனைத்தும், இன்னமும் மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இன்னமும் ஒப்படைக்காத வாகனங்களையே ரணில் விக்ரமசிங்க தரப்பினர் பயன்படுத்துவதாக குறிப்பிடப்படுகின்றது.

அனைத்து வாகனங்களும் வழங்காமையினால் பிரதமர் செயலகத்தின் அத்தியாவசிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் செயலகத்திற்கு சொந்தமான 39 வாகனங்களை ரணில் விக்ரமசிங்க தரப்பினர் வழங்கவுள்ளதாக பிரதமரின் செயலாளர் எஸ்.அமரசேக தெரிவித்துள்ளார்.

பிரதமர் செயலக நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்வதற்காக பிரதமர் செயலகத்திற்கு 267 வாகனங்கள் காணப்பட வேண்டும். எனினும் தற்போது 228 வாகனங்கள் மாத்திரமே உள்ளதாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக வாகனங்கள் மற்றும் அலரி மாளிகையை மீண்டும் வழங்குமாறு ரணில் விக்ரமசிங்க தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சட்ட ரீதியாக எடுப்பதற்கு முன்னர் குறித்த தரப்பினர் தங்களிடம் உள்ள வாகனங்களை ஒப்படைத்து விடுவார்கள் என தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய முறையில் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்ட போதும், அதிகாரபூர்வமாக அவரே தற்போதும் செயற்பட்டு வருகிறார். எனினும் சட்ட ரீதியான பிரதமர் தான் என ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதுடன், அலரி மாளிகையில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers