வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ள மைத்திரி!

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஒருவர் தன்னுடைய ஊழலை கண்டுபிடிப்பதற்கு முதன் முறையாக ஆணைக்குழு ஒன்றை நியமித்ததன் மூலம் இந்த சாதனை ஏற்படுத்தப்படவுள்ளது.

இதன்மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக மங்கள இதனை குறிப்பிட்டுள்ளார்.

2015-2018 ஆம் ஆண்டு காலத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மற்றும் முறைக்கேடுகளை கண்டுபிடிக்க ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதாக ஜனாதிபதி நேற்று சர்வதேச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் மங்கள இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையின் தலைவர் என்ற ரீதியில் அந்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற முறைகேடுகள், மோசடிகளுக்கு ஜனாதிபதிக்கும் பங்கு உள்ளதாக பல அரசியல் தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers