பிரதமர் என்று யாரையும் அழைக்க வேண்டாம்: ஊடகங்களிடம் ஐ.தே.க கோரிக்கை

Report Print Kamel Kamel in அரசியல்
109Shares

பிரதமர் என்று யாரையும் அழைக்க வேண்டாம் என ஊடக நிறுவனங்களிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிமினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் தற்பொழுது சட்ட ரீதியான அரசாங்கம் எதுவும் கிடையாது. இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைச்சர்களாகவோ, பிரதமராகவோ ஊடக நிறுவனங்கள் அழைக்க வேண்டியதில்லை.

பிரதமர், அமைச்சர், பிரதி அமைச்சர், இராஜாங்க அமைச்சர், அவைத் தலைவர், ஆளும் கட்சியின் பிரதம கொறடா உள்ளிட்ட பதவிகள் எதுவும் தற்பொழுது நாட்டில் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஊடக நிறுவனங்கள் இந்தப் பெயர்களில் யாரையும் அழைக்க வேண்டியதில்லை என அவர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் அரசாங்கம் ஒன்று இல்லை என்பதனை நாடாளுமன்றின் ஹன்சார்ட் அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டிருந்தார்.