அரசியல் கைதிகளை பார்வையிட்ட மகிந்தவின் பிரதி அமைச்சர்கள்

Report Print Dias Dias in அரசியல்

அரசியல் கைதிகள், விடுதலை கிடைக்கும் என்று நம்பி நம்பி ஏமாந்து இருக்கின்றார்கள் என பிரதி அமைச்சர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்தார்.

கொழும்பு - மத்திய மகசின் சிறை வளாகத்தில் அரசியல் கைதிகளை பார்த்து விட்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“நாங்கள் இன்று மகசின் சிறையிலிருக்கும் அரசியல் கைதிகளை சந்தித்தோம். 105 அரசியல் கைதிகளில் கிட்டத்தட்ட 60, 70 அரசியல் கைதிகளை சந்திக்க கூடியதாக இருந்தது.

அவர்களுடைய வேதனை பயங்கரமாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் மூன்றரை வருடங்களாக எங்களை நம்பி இந்த நல்லாட்சியூடாக ஏதாவதொரு பொறிமுறை, ஏதாவதொரு விடுதலை கிடைக்கும் என்று நம்பி நம்பி ஏமாந்து இருக்கின்றார்கள்.

தற்போது நல்ல சூழல் வந்திருக்கின்றது. ஏனென்றால். கடந்த 2 கிழமையாக ஜனாதிபதி மைத்திரி, பிரதம மந்திரி, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, நான், வியாழேந்திரன், மஸ்தானா, சுசில் பிரேம ஜயந்தவை குழுவாக அமைத்து பொறிமுறையில் விடுவிக்க வேண்டும் என்பதிற்காக போராடிக் கொண்டிருக்கிறோம்” என தெரிவித்தார்.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

“இன்று காலை 10.30 மணியளவில் பிரதி அமைச்சர் அங்கஜன் ராமநாதனும், மஸ்தானாவும் நானுமாக கொழும்பில் உள்ள சிறைச்சாலைக்கு சென்று அங்கிருக்கின்ற 71 கைதிகளோடு கிட்டத்தட்ட ஒன்றரை மணித்தியாளங்களாக அவர்களுடன் பல்வேறுப்பட்ட விடயங்களை குறித்து நாங்கள் பேசினோம்.

அவர்களுடைய ஒருமித்த கருத்தாக 105 கைதிகள் புனர்வாழ்வின் அடிப்படையிலாவது அவர்களை முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இருக்கின்றது” என தெரவித்தார்.

Latest Offers