எங்களது ஆட்சிக் காலத்தில் பிரபாகரனுக்கு கேக் வெட்டியிருந்தால் அவ்வளவுதான் - நலின் பண்டார

Report Print Kamel Kamel in அரசியல்

தங்களது ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளுக்காக கேக் வெட்டியிருந்தால் அவ்வளவுதான் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இன்று இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பிரபாகரனின் பிறந்த நாளுக்காக கேக் வெட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான ஓர் சம்பவம் எமது ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றிருந்தால் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போன்றவர்கள் வாயை கூர்மையாக்கிக் கொண்டு துள்ளிக் குதித்திருப்பார்கள்.

இன்று அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் மௌனம் காத்து வருகின்றார்கள். ஜனாதிபதியின் இறுதி துருப்புச் சீட்டு ஐக்கிய தேசியக் கட்சியை இரண்டாக பிளவடையச் செய்வதாகும்.

தேர்தல்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அஞ்சியதில்லை. ஜனாதிபதி தேர்தலோ அல்லது பொதுத் தேர்தலோ மிகச் சிறந்த வேட்பாளர்கள் எம்மிடமே உள்ளனர்.

தேவையான நேரத்தில் தேவையான வகையில் நாம் துருப்புச் சீட்டுக்களை இறக்குவோம் என நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

Latest Offers