பிரபாகரனை போன்று செயற்படுகின்றார் கரு!!!

Report Print Kamel Kamel in அரசியல்

சபாநாயகர் கரு ஜயசூரிய, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போன்று செயற்படுகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்...

நாடாளுமன்றம் தற்பொழுது அதி உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றமடைந்துள்ளது. கடந்த காலங்களில் இருந்ததனைப் போன்று தற்பொழுது நாடாளுமன்றம் கிடையாது.

நாடாளுமன்றம் தற்பொழுது விடுவிக்கப்படாத பிரதேசமாகவே காணப்படுகின்றது. சபாநாயகரின் பாதுகாப்பு வலயமொன்றுடன் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றமே காணப்படுகின்றது.

கடந்த காலங்களில் பிரபாகரன் எப்படி இருந்தாரோ அவ்வாறே சபாநாயகர் கரு ஜயசூரிய தற்பொழுது இருக்கின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers