மைத்திரி - மகிந்த அணியிலிருந்து மீண்டும் ரணில் பக்கம் தாவிய வசந்த சேனாநாயக்க!

Report Print Murali Murali in அரசியல்

அமைச்சர் வசந்த சேனாநாயக்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார்.

இதனையடுத்து கொழும் அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்ததுடன், கட்சி தாவல்கள் மிக வேகமாக இடம்பெற்றன. ஐக்கிய தேசிய கட்சியிலிருந்த பலர் மைத்திரி - மகிந்த தரப்புக்கு ஆதரவு வழங்கினர்.

அத்துடன், அமைச்சு பதவிகளையும் பெற்றுக்கொண்டனர். அந்த வகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் மிக முக்கிய உறுப்பினராக இருந்த வசந்த சேனாநாயக்க கட்சியிலிருந்து விலகி மைத்திரி - மகிந்த தரப்புக்கு ஆதரவு வழங்கியிருந்தார்.

அத்துடன், அமைச்சு பதவியும் பெற்றுக்கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளின் பின்னர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக வசந்த சேனாநாயக்க தெரிவித்திருந்தார்.

எனினும், கடந்த வாரம் இடம்பெற்ற மைத்திரி - மகிந்த தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை கூட்டத்தில் வசந்த சேனாநாயக்க கலந்துகொண்டிருந்தார். இந்த விடயம் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், தற்போது அலரி மாளிகையில் இடம்பெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் குழு கூட்டத்தில் வசந்த சேனாநாயக்கவும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த புகைப்படம் ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers