பகிரங்க மன்னிப்பு கேட்ட வசந்த சேனாநாயக்க

Report Print Vethu Vethu in அரசியல்

மஹிந்த - மைத்திரி தரப்பில் இருந்து இன்று மீண்டும் ரணில் பக்கம் தாவிய நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க மன்னிப்பு கோரியுள்ளார்.

அலரி மாளிகையில் தற்போது இடம்பெற்று வரும் கூட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இரு தரப்புகளிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க, குறிப்பிட்டுள்ளார்.

தனது அமைச்சரவையில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாகவும் தான், எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தற்போது 123 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள் என ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.

Latest Offers