மைத்திரி - மஹிந்தவின் சூழ்ச்சியால் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய பாதிப்பு

Report Print Vethu Vethu in அரசியல்

இலங்கையின் ஒவ்வொரு குடிமகன் மீதும் 30000 ரூபாய் மேலதிக கடன் சுமை அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்சவினால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் சூழ்ச்சி காரணமாக, நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதாரம் மற்றும் அரசியல் ஸ்திரமற்ற நிலை காரணமாக 2019ஆம் ஆண்டில் ஒவ்வொரு குடிமகன் மீதும் மேலதிக சுமை சுமத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டவிரோத பிரதமருக்கு ஆதரவாக இருக்கு பொருளாதார உதவியாளர்கள், மஹிந்த பிரதமராகினால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என கூறிய கருத்து, மிகப்பெரிய பொய் என்பதனை வெளிக்காட்ட மிக சிறந்த சந்தர்ப்பம் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மஹிந்த ராஜபக்ச, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மக்களுக்கு கொண்டு சேர்த்து விட்டாரா? மத்தல விமான நிலையத்தை தாம் நடத்திச் செல்வதாக உறுதியாக வாக்குறுதி அளித்துள்ளார்களா? அதேபோன்று சிங்கப்பூர் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டுள்ளதா? ரூபாய் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலதிகமாக 30000 ரூபாய் கடன் சுமையே ஒவ்வொரு குடிமகன் மீதும் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Latest Offers