மகிந்தவால் மைத்திரிருக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி!

Report Print Murali Murali in அரசியல்

கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றம்சாட்டப்பட்ட சிலர் அண்மையில், முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இவர்கள் அரச நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றத்தையடுத்து, பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார். இந்நிலையில், மகிந்த தரப்பினர் அரச நிறுவனங்களின் முக்கிய பதவிகளுக்கு தமது ஆதரவாளர்களை நியமித்து வருகின்றனர்.

இலங்கை விமான சேவை நிறுவனத்தின் தலைவராக கபில சந்திரசேனவும், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நாலக கொடகேஹவவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் நியமனம் கடும் எதிர்ப்பையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக இவர்கள் விசாரணைகளை எதிர்கொண்டு வரும் நிலையிலேயே இந்த நியமனங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

எவ்வாறாயினும், கபில சந்திரசேன மற்றும் நாலக கொடகேஹவவின் நியமனங்களைத் தாம் எதிர்ப்பதாகவும், அந்த நியமனங்கள் தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

Latest Offers