ரணில் தரப்பு வைத்த தந்திரப் பொறி! சுதாகரித்துக்கொண்ட மைத்திரி

Report Print Murali Murali in அரசியல்

கடந்த 14ஆம் திகதி நாடாளுமன்றில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தனக்கு எதிராக பயன்படுத்த கூடும் என்ற காரணத்தினால் அதனை நிராகரித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகங்களுக்கு நேற்று கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய ஜனாதிபதி,

“கடந்த 14ஆம் திகதி நாடாளுமன்றில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டிருந்தது. இதற்கு 122 பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

எனினும், தனக்கு எதிரான குற்றவியல் பிரேரணையைக் கொண்டுவர வழியமைத்து விடும் என்ற காரணத்தினால் அந்த பிரேரணையை தான் நிராகரித்துவிட்டேன்.

நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக் கொள்வதற்கு, 14ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் முதலாவது பந்தியை நீக்குமாறு நிபந்தனை விதித்தேன்.

அதில் ஒக்ரோபர் 26ஆம் திகதி பிரதமரைப் பதவி நீக்கியும், புதிய பிரதமரை நியமித்தும், ஜனாதிபதி வெளியிட்ட இரண்டு அரச வர்த்தமானிகளும் அரசியலமைப்புக்கு முரணானவை, செல்லுபடியற்றவை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தப் பந்தியை உள்ளடக்கிய பிரேரணையை ஏற்றுக் கொண்டால், நான் அரசியலமைப்பை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டுகளை சுமக்க நேரிடும். பின்னர் அது, எனக்கு எதிராகவும் பயன்படுத்தப்படலாம்.

அதனை நான் ஏற்றுக்கொண்டால், நான் அரசியலமைப்பை மீறிவிட்டதாக, எதிர்காலத்தில் என் மீது குற்றவியல் பிரேரணையை கொண்டு வர முடியும்.

ஆகையினால் குறித்த பிரேரணையை நிராகரித்துவிட்டேன்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers