சந்தர்ப்பம் வரும் போது உண்மைகளை வெளிப்படுத்துவோம்! மைத்திரிக்கு எச்சரிக்கை

Report Print Murali Murali in அரசியல்

மகிந்த ராஜபக்ச பிரதமர் வேடத்தை கலைத்து விட்டு பெரும்பான்மைக்கு முன்னுரிமை கொடுக்க வேணடும் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக அவர் பிரச்சினைகளில் இருந்து விலகிச் செல்ல வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற செயதியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகளை விசாரிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழுவை நியமிப்பதாக குறிப்பிட்டுள்ள விடயம் வரவேற்கத்தக்கது.

இந்த விசாரணைகளுக்கு நாம் எவ்வித தடைகளையும் ஏற்படுத்த மாட்டோம். ஆனால் இந்த விசாரணைகள் அரசியல் பழிவாங்கல்களை அடிப்படையாக கொண்டு அமையக் கூடாது.

எவன்காட் விவகாரம் தொடக்கம் வஸீம் தாஜூதீன் கொலை, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை மற்றும் ஊடகவியலாளர் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் வரையிலான அனைத்து குற்றசெயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை அறிந்துவைத்துள்ளோம்.

சந்தர்ப்பம் வரும்போது இது தொடர்பிலான உண்மை தகவல்களை மக்களுக்கு தெளிவுப்படுத்துவோம். மகிந்த ராஜபக்ச பிரதமர் வேடத்தை கலைத்து விட்டு பெரும்பான்மைக்கு முன்னுரிமை கொடுக்க வேணடும்.

இதன் ஊடாக அவர் பிரச்சினைகளில் இருந்து விலகிச் செல்ல வேண்டும் என சம்பிக்க ரணவக்க மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்ய ஆணைக்குழு ஒன்றை நியமிக்க உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறியுள்ளார்.

Latest Offers