மைத்திரி - மகிந்தவிற்கு பெரும்பான்மை கிடையாது! உண்மையை வெளிப்படுத்திய மகிந்தவின் சகா

Report Print Murali Murali in அரசியல்

தனிநபர்கள் குறித்தும், கட்சி குறித்தும் யோசிக்காமல் நாட்டைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானம் ஒன்றுக்கு வர வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

தனியார் வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

பிரதமர் இருவரை நியமித்ததன் மூலம் ஜனாதிபதி குழியில் விழுந்துள்ளார். தற்போதைய அரசாங்கத்துக்கு ஒருபோதும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதுதான் உண்மை.

விரும்பியோ, வெறுத்தோ ஒரு முறை காலை பின்னோக்கி வைக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இதுதான் அதி உயர்ந்த மகாத்மா அரசியலாகும்.

ஜனாதிபதி இந்த அரசாங்கத்தைக் கொண்டு போக பெரும்பான்மையை நிரூபித்திருக்க வேண்டும். அவ்வாறு நிரூபிக்க ஜனாதிபதி தவறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்து கொண்டு இந்தக் கருத்தைக் கூறுவதையிட்டு, சிலர் என்னுடன் கோபித்துக் கொள்வார்கள். இருப்பினும், இதுதான் உண்மை எனவும் அவர் மேலும் கூறினார்.

Latest Offers