தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றியே தீருவேன்! மைத்திரி உறுதி

Report Print Murali Murali in அரசியல்

தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றியே தீருவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்தார்.

“2015ஆம் ஆண்டு தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் என்னை முழுமையாக ஆதரித்தார்கள், அதனை நான் என்றும் மறக்கமாட்டேன்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதில் உடன்படுகிறேன்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதென்பதற்காக நான் அதனைக் கைவிட மாட்டேன். வாக்குறுதிகளை நிறைவேற்றும் முழுப் பொறுப்பையும் நான் நிச்சயம் முன்னெடுத்துச் செல்வேன்” என்றும் ஜனாதிபதி கூறினார்.

Latest Offers