109 நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருமா?

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் 109 நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் வாழ்க்கைக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்கணாலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனினால் மேற்கொள்ளப்பட்ட பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய, அவரிடமிருந்து கோடிக் கணக்கில் பணம் பெற்றுக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் 109 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டதன் பின்னர் அவர்களது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும்.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள நேரிடும்.

எதிர்வரும் சில தினங்களில் அர்ஜூன் மகேந்திரன் கைது செய்யப்படுவார்.

அர்ஜூன் மகேந்திரனை கைது செய்ததன் பின்னர் அவரிடமிருந்து மோசடியுடன் தொடர்புடைய ரகசியங்கள் அம்பலமாகும் எனவும் அதன் காரணமாகவே நல்லாட்சி அரசாங்கம் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்யவில்லை என கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Latest Offers