பிரதமர் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் செய்ய முடியாது: தயாசிறி ஜயசேகர

Report Print Kamel Kamel in அரசியல்

பிரதமர் தொடர்பிலோ அல்லது அமைச்சரவை தொடர்பிலோ நாடாளுமன்றில் விவாதம் செய்ய முடியாது என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு விசாரணை செய்யப்படுகின்றது.

இதன்படி நாடாளுமன்றின் நிலையியற் கட்டளைகள் தொடர்பான 36ம் சரத்திற்கு அமைய பிரதமர் அல்லது அமைச்சரவை தொடர்பில் யோசனை முன்வைத்து விவாதம் செய்ய முடியாது.

நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில் அந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட முடியாது என நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியினால் நாடாளுமன்றில் கொண்டு வரப்பட உள்ள யோசனை நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதனால், இதனை நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட முடியாது என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Latest Offers