ஜனாதிபதியின் கருத்தால் ரணில் தரப்பு எடுத்துள்ள தீர்மானம்

Report Print Kamel Kamel in அரசியல்

இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு யாரையும் பரிந்துரை செய்ய போவதில்லை என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

பெரும்பான்மை பலத்தை நிரூபித்தாலும் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கப் போவதில்லை என அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் இந்த கூற்று அரசியல் அமைப்பிற்கும் அரசியல் நியாயங்களுக்கும் முழுக்க முழுக்க முரண்பாடானது என ஐக்கிய தேசிய முன்னணியினர் குறிப்பிட்டுள்ளனர்.

ரணிலுடன் ஏற்பட்டுள்ள தனிப்பட்ட முரண்பாடு காரணமாக நாடாளுமன்ற நியதிகள் மீறப்படுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் ஐக்கிய தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.

Latest Offers