இன்று சில புதிய முகங்கள் எமக்கு ஆதரவாக நாடாளுமன்றில் வாக்களிப்பார்கள்! சஜித் பிரேமதாச

Report Print Kamel Kamel in அரசியல்

புதிய முகங்கள் பலர் தம்முடன் இணைந்து கொள்ள உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

நாடாளுமன்ற அமர்வுகள் சட்டவிரோதமானது என்பது அல்ல அவர்களின் பிரச்சினை, இன்னும் சில உறுப்பினர்களின் ஆதரவு எமக்கு அதிகரித்துள்ளது என்பதே அவர்களின் பிரச்சினை.

இன்றைய தினம் பிரதமரின் செலவுகள் குறித்த நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்யும் வகையிலான யோசனை ஒன்றை நாம் சமர்ப்பிக்க உள்ளோம்.

இதன்போது எமது பெரும்பான்மை பலம் மேலும் மேலும் அதிகரிக்க உள்ளது. இன்னும் சில புதிய முகங்கள் எமக்கு ஆதரவாக நாடாளுமன்றில் வாக்களிக்க உள்ளனர்.

அவர்கள் யார் என்பதனை நாடாளுமன்ற அமர்வுகளின் போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள். ஜனநாயகத்தை எதிர்நோக்க முடியாது மஹிந்த தரப்பினர் மிகவும் கோழைத்தனமாக செயற்பட்டு வருகின்றனர்.

மிளகாய்த்தூள் அடித்தோ அல்லது அச்சுறுத்தியோ நாட்டின் ஜனநாயகத்தை நிரூபிக்க முடியாது.

பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமாயின் நாடாளுமன்றில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி அதனை நிரூபிக்க முடியும் என கூறியுள்ளார்.

Latest Offers