மஹிந்த தரப்பினர் ஏன் நாடாளுமன்றம் வருகின்றார்கள்?

Report Print Kamel Kamel in அரசியல்

மஹிந்த தரப்பினர் ஏன் நாடாளுமன்றிற்கு வருகின்றார்கள்? என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் உரிய முறையில் செயற்படவில்லை என்றால் எதற்காக அவர்கள் நாடாளுமன்றிற்கு வருகின்றார்கள்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமரின் செலவுகளை குறைப்பது குறித்த யோசனை இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தோல்வியடைந்த மனோ நிலையில் உள்ள மஹிந்த தரப்பினர் செய்வதறியாது பிதற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் குழுக் கூட்டமே நாடாளுமன்றில் நடக்கின்றது என குற்றம் சுமத்துவோர் ஏன் நாடாளுமன்றிற்கு வருகின்றார்கள்? என ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

Latest Offers