அரசியலில் ஈடுபடப் போவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை: ரொசான்

Report Print Kamel Kamel in அரசியல்

அரசியலில் ஈடுபடப் போவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரரும், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டி மத்தியஸ்தருமான ரொசான் மஹானாம தெரிவித்துள்ளார்.

தாம் அரசியலில் ஈடுபடப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

அரசியலில் களமிறங்கும் எவ்வித எண்ணமும் கிடையாது. கிரிக்கெட் விளையாட்டு ஊடாக நாட்டுக்கு உச்ச அளவில் சேவை செய்துள்ளேன்.

எனினும் எந்தவொரு நேரத்திலும் அரசியலில் ஈடுபடும் திட்டம் கிடையாது என தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொறுப்பு வாய்ந்த பிரஜை என்ற வகையில் சமூகத்திற்கு நற்பணிகளை உச்ச அளவில் ஆற்றுவதாகவும், ஒருவர் மற்றுமொருவரின் வாழ்க்கையை அரசியல் நடவடிக்கைகளின் ஊடாக மாற்றுவதற்கு முயற்சிக்கக்கூடாது எனவும் கூறியுள்ளார்.

Latest Offers