நாடாளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்த கோரி ஆர்ப்பாட்டம்

Report Print Thirumal Thirumal in அரசியல்

நாடாளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி பத்து இலட்சம் கையொப்பங்கள் திரட்டும் நடவடிக்கையும், ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா - கினிகத்தேனை நகர பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்று அம்பகமுவ பிரதேச சபையின் தலைவர் ஜெயசங்க பெரேரா தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் சரியான தீர்வை பெற்றுக் கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுத்து நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இதனை தொடர்ந்து கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Latest Offers