பெரும்பான்மை பலமுடையவர்களுக்கு ஆட்சியை வழங்குங்கள்: விஜயதாச

Report Print Kamel Kamel in அரசியல்

நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம் உடையவர்களுக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் விசேட உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

மஹிந்த தரப்பினரும், ரணில் தரப்பினரும் நாடாளுமன்றில் நடந்து கொண்ட விதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இரண்டு தலைவர்களும் தமது உறுப்பினர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள தவறியிருந்தனர்.

நாடாளுமன்றின் அதிகாரம் தொடர்பில் நீதிமன்றில் விளக்கம் கேட்பது பிழையானது, இதனால் நாடாளுமன்றின் உள்ள அதிகாரங்கள் மலினப்படுத்தப்படுகின்றன.

ஜனாதிபதியும் சபாநாயகரும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயதாச ராஜபக்ச கோரியுள்ளார்.

Latest Offers