யாழ். மாநகர சபை அமர்வில் மாவீரர்களுக்கு அஞ்சலி

Report Print Sumi in அரசியல்

யாழ். மாநகர சபையின் விசேட அமர்வின் போது மாவீரர்கள் மற்றும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இவ்விசேட அமர்வு இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியது.

இதில் மண்ணின் விடுதலைக்காக உயிரிழந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், சபை அமர்வினை ஆரம்பிக்க வேண்டுமென தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் லோகதயாளன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன்போது, உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

போராட்ட காலத்தில் உயிரிழந்த அனைத்து இயக்க உறுப்பினர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும், கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் யாழ். மாநகர முன்னாள் முதல்வரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான யோகேஸ்வரி பற்குணராஜா சுட்டிக் காட்டினார்.

Latest Offers