சிறையில் தனிமையில் இருக்கும் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி

Report Print Steephen Steephen in அரசியல்

என்னை சந்திக்க எவரையும் அனுமதிக்கவில்லை என வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன தெரிவித்துள்ளார்.

வெளியில் இருந்து உணவு எடுத்து வரும் தேவை இருந்தால், சிறைச்சாலை அத்தியட்சகரிடம் கோரிக்கை விடுக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் இது குறித்து ரவிந்திர விஜேகுணரத்ன எந்தவொரு கோரிக்கையையும் விடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாகவே கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி சிறையில் தனிமையில் இருப்பதாக கூறப்படுகிறது.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி நேற்றிரவு மெகசீன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அவர் வெலிக்கடை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

விஜேகுணரத்ன சிறைச்சாலையில் பாதுகாப்பான இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவரது பாதுகாப்பு கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

5 மாணவர்கள் உட்பட 11 இளைஞர்களை கடத்தி சென்று காணாமலாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நேவி சம்பத் என்ற சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு அடைக்கலம் கொடுத்தாக விஜேகுணரத்னவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான விஜேகுணரத்னவை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டிருந்தார்.

Latest Offers