பெரும்பான்மை இல்லாத அரசாங்கம் பதவி விலக வேண்டும்: நவின் திஸாநாயக்க கோரிக்கை

Report Print Steephen Steephen in அரசியல்

அரசியலமைப்பு சட்டத்தின்படி பெரும்பான்மை இல்லாத அரசாங்கம் தயவு செய்து பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நவின் திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் கோரியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள பிரதமரின் செலவுகளை இரத்து செய்யும் யோசனையை ஆமோதித்து இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அதேவேளை நாடாளுமன்றத்தில் இன்று கொண்டு வரப்பட்டுள்ள யோசனை அரசியலமைப்பு சட்டத்தை மீறிய நடவடிக்கை அல்ல என சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இந்த யோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கொண்டு வந்துள்ளார்.

எவ்வாறாயினும் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள யோசனை அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers