ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில் இன்று மாலை விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு அமைய இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கும் அணியிடம் அரசாங்கத்தின் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், ஜனாதிபதியுடன் சபாநாயகர் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் விஜயதாச ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

Latest Offers