நீதிமன்றத்தில் உள்ள விடயத்தை நாடாளுமன்றத்தில் விவாதிப்பது தவறு!

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதமர் மற்றும் அமைச்சர்கள் செலவுகள் தொடர்பான ஐக்கிய தேசியக்கட்சி தொடர்ந்துள்ள வழக்கு விசாரிக்கப்படுவதால், நாடாளுமன்றத்தில் அது சம்பந்தமான யோசனையை விவாதத்திற்கு எடுத்து நிறைவேற்றுவது தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியின் குழு அறையில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்ட விடயம் ஒன்று தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முடியாது என சகல சபாநாயகர்களும் வழங்கிய தீர்ப்பை தற்போதைய சபாநாயகர் மீறியுள்ளார்.

அத்துடன் அரசியலமைப்புச் சட்டத்தின் 152வது சரத்திற்கு அமைய அமைச்சரவையின் அனுமதியுடனேயே நாடாளுமன்றத்தில் நிதி சட்டமூலமோ நிதி யோசனையோ கொண்டு வர முடியும் எனவும் அவர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers