சபாநாயகர் - ஜனாதிபதி சந்திப்பு! மைத்திரி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளை நாளை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பின் போது தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது பற்றி ஜனாதிபதி பேசவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் இடையில் இன்று மாலை முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன் போது ஜனாதிபதி குறித்த விடயங்களை சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார்.

இதனால் கொழும்பு அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் பதவி குறித்து பெரும் சரச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில், மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்தும் இன்றைய தினம் பிரதமர் பிரதமர் அலுவலகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யும் சட்டமூலத்தை முடக்கும் பிரேரணையும் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே, ஜனாதிபதியும், சபாநாயகரும் இன்று மாலை சந்தித்து பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers