மைத்திரி - மகிந்தவுக்கு ஏற்பட்ட நிலை! அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய அமைச்சர்?

Report Print Murali Murali in அரசியல்

அரசாங்கத்தில் இருந்து வெளியேறி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட போவதாக உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

நாடாளுமன்றத்தில் சுதந்திரமான உறுப்பினராக இருந்தாலும், தாம் தொடர்ந்தும் உயர்கல்வி அமைச்சராக பதவியில் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய நாடாளுமன்ற அமர்வை அரசாங்க தரப்பு புறக்கணித்திருந்த நிலையில், அரச தரப்பு சார்பில் விஜேதாச ராஜபக்ச மட்டுமே கலந்துகொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார்.

இதனை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறிய விஜேதாச ராஜபக்ச மைத்திரி - மகிந்த தலைமையிலான அரசாங்கதிற்கு ஆதரவு வழங்கியிருந்தார்.

அத்துடன், தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் அரசாங்கதில் உயர் கல்வி அமைச்சராகப் பதவியேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers