நாங்கள் பொதுஜன பெரமுனவின் வேகத்தை குறைத்தோம் - எஸ்.பி.திஸாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பயண வேகத்தை தம்மால் குறைக்க முடிந்ததாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியின் முக்கியஸ்தரான அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.திஸாநாயக்க , மைத்திரி - மகிந்த இணைப்புக்கு முன்னோடியாக செயற்பட்டவர். எஸ்.பி.திஸாநாயக்க தனது ஊடக நண்பர் ஒருவரிடம் இவ்வாறு கூறியுள்ளார்.

“ தாமரை மொட்டுக் கட்சி படுவேகமாக வளர்ச்சியடைந்து வந்தது. அதே வேகத்தில் சென்றிருந்தால், முழு நாடும் பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும்.

தற்போது அந்த கட்சியின் வேகம் குறைந்துள்ளது. அப்படியில்லை என்றால், நாங்கள் சிதறி போயிருப்போம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் மகிந்த ராஜபக்சவையும் மத்தியஸ்த நிலைமைக்கு கொண்டு வந்ததன் மூலம் பொதுஜன பெரமுனவின் வேகத்தை குறைக்க முடிந்துள்ளது”என எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள திஸாநாயக்கவின் ஊடக நண்பர், “கடவுளே இதனை முதலில் கூறியிருந்தால், நாங்கள் குழப்பமடைந்திருக்க மாட்டோம். நாங்களும் ஒரு பக்கம் ஒதுங்கி இருந்திருப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers