அவசரமாக கொழும்பு வந்த ஐ.நா அதிகாரி! ஜனாதிபதி வழங்கிய உறுதி

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பணிப்பாளர் மரி யமஷிட்டா இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியைத் தணிக்கத் தாமதமின்றி முயற்சிகளை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் ஐநா பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், அந்த முயற்சிகளுக்கு சர்வதேச சமூகம் முழு ஆதரவை வழங்கும் எனவும் அவர் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், அரசமைப்பின் பிரகாரம் உரிய விடயங்களைக் கையாண்டு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு முடிவைக் காணவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது உறுதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பணிப்பாளர் மரி யமஷிட்டா அமெரிக்காவிலிருந்து அவசரமாக நேற்று முன்தினம் கொழும்பு வந்திருந்தார்.

இலங்கை வந்த கையுடன் யமஷிட்டா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று முன்தினம் இரவு சந்தித்து பேசியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers