பெண்ணை துஷ்பிரயோகம் செய்தவரை சிறையில் சென்று பார்வையிட்ட மஹிந்த

Report Print Vethu Vethu in அரசியல்

2011 வருடம் தங்காலை ஹோட்டலில் பிரித்தானியா நாட்டவரை கொலை செய்து அவரது காதலியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபரை பிரதமர் மஹிந்த ராஜபக்ச பார்வையிட்டுள்ளார்.

தங்காலை பிரதேசசபையின் முன்னாள் தலைவர் சம்பத் விதானபத்திரனகே என்பவரின் நலம் விசாரிப்பதற்காக இன்று காலை அவர் சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியினால் பிரதமராக பெயரிடப்பட்ட மஹிந்த ராஜபக்ச இன்று காலை 9.00 மணியளவில் வெளிக்கடை PH அறைக்கு சென்று சம்பத் விதானபத்திரனவுடன் 20 நிமிடங்களுக்கும் அதிக நேரம் உரையாடியுள்ளார் என குறித்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

சம்பத் விதானபத்திரனகே என்பவர் மஹிந்தவுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும்.

நேற்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பாதுகாப்பு பிரிவு பிரதானி ரவீந்திர விஜேகுணரத்னவின் நலன் விசாரிக்க சென்ற சந்தர்ப்பத்திலேயே சம்பத் என்பவரையும் சந்தித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Latest Offers