பிரதமர் பதவி குறித்து சஜித்தின் நிலைப்பாடு!

Report Print Murali Murali in அரசியல்

முறையான வகையில் பிரதமர் பதவி கிடைக்கும் வரையில் அதனை பெற்றுக்கொள்ளப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரதமர் பதவி வழங்கும் போது அது சரியான முறையில் வழங்கப்பட்டுள்ளதா என்பதை யாரும் பார்ப்பதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“ஜனாதிபதி தன்னிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு கூறினார். எனினும், நான் அதனை நிராகரித்து விட்டேன்.

முறையான வகையில், பிரதமர் பதவி கிடைக்கும் வரையில் அதனை பெற்றுக் கொள்ள போவதில்லை என தீர்மானமாக இருக்கின்றேன்.

எந்த விடயமும், அரசியலமைப்புக்கு உட்பட்டதாக அமைத்துக் கொள்ள வேண்டும். பிரதமர் பதவியை வழங்கியமைக்காக அதனைப் பெற்றுக் கொள்ள கூடாது.

பிரதமர் பதவியை கொடுக்கும் போதே அதனை சிலர் பறித்தெடுத்துக் கொள்கின்றனர். தனக்குப் பிரதமர் பதவியை வழங்கும் முறை சரியா பிழையா எனப் பார்ப்பதில்லை.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் நாளைய தினம் ஐந்தாவது தடவையாகவும் இந்த சட்ட விரோத அரசாங்கத்தை தோற்கடிக்க போவதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers