சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கூட்டு படைகளின் பிரதானியை சந்தித்தார் மகிந்த!

Report Print Murali Murali in அரசியல்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கூட்டு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை பிரதமர் மகிந்த ராஜபக்ச சந்தித்து பேசியுள்ளார்.

கொழும்பில் 11 மாணவர்கள் கடத்தல் விவகாரத்தில் பிரதான சந்தேகநபர் நேவி சம்பத்துக்கு அடைக்கலம் கொடுத்தமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ரவீந்திர விஜேகுணரத்னவை நேற்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

நீதிமன்றில் சரணடைந்த அவரிடம் ஐந்து மணித்தியாலங்களுக்கும் அதிகமாக நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

அதன் பின்னர், அவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி நேற்றிரவு மெகசீன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அவர் வெலிக்கடை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

ரவீந்திர விஜேகுணரத்ன சிறைச்சாலையில் பாதுகாப்பான இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரை பிரதமர் மகிந்த ராஜபக்ச சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest Offers