யாழில் சிங்களவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது! இதுவே ஜனநாயகம்: மகிந்த

Report Print Jeslin Jeslin in அரசியல்

பெரும்பான்மையைக் கொண்ட தரப்பினரின் கருத்துக்களுக்கு மாத்திரம் செவிசாய்ப்பது ஜனநாயகம் ஆகாது என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையை கொண்ட தரப்பினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானங்களை எடுப்பதே உண்மையான ஜனநாயகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழில் தமிழ் மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையை கொண்டிருப்பதால் அங்கு சிங்கள மொழி பேசுபவர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது.

அதேபோன்று அம்பாந்தோட்டையில் சிங்களம் பேசுவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers