பிரதமர் மகிந்த ராஜபக்ச பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவு!

Report Print Murali Murali in அரசியல்

எரிபொருள் விநியோகத்தில் முரண்பட்ட விலைகளை பேணுமாறு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்திற்கு உரிய கனிய எண்ணெய் பங்காளர்கள் சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் போது பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருளைக் காட்டிலும், லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விலை அதிகரித்த நிலையில் விற்கப்படுகிறது.

இதனால் பெற்றோலை விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்திற்கு உரிய கனிய எண்ணெய் பங்காளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினார்.

இந்த சந்திப்பில் கனிய எண்ணெய் வள அமைச்சர் காமினி லொக்குகே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers