இலங்கை கடற்படைக்கு மிகவும் துயரமான நாள்! கவலையில் கடற்படையின் முன்னாள் முக்கியஸ்தர்

Report Print Jeslin Jeslin in அரசியல்

பதவி நிலைக்கும் இலங்கை கடற்படைக் கோவைக்கும் துக்கமான நாள் இது என்று, இலங்கையின் முன்னாள் கடற்படை அதிகாரி, றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.

11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், நேற்று இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இது தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் அதிகாரியும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான, றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்ரம தனது கீச்சகப் பக்கத்தில், நேற்று பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதில், “பதவி நிலைக்கும் சிறிலங்கா கடற்படைக் கோவைக்கும் துக்கமான நாள்” என்று கூறியுள்ளார்.

Latest Offers