தோல்வியை ஏற்றுக்கொண்டு பதவி விலகத் தயாராகும் மஹிந்த!

Report Print Vethu Vethu in அரசியல்

பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக சர்ச்சைக்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பதவி கவிழ்க்கப்பட்ட பிரதமரும் ஐக்கிய தேசிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவிடம் மஹிந்த இது தொடர்பில் அறிவித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தான் இராஜினாமா செய்கின்றமையினால் பிரதமர் பதவி ஏற்குமாறு மஹிந்த, ரணிலிடம் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய தேசிய கட்சி தலைவர், ரணில் விக்ரமசிங்கவை நேற்று நாடாளுமன்ற நூலகத்தில் திடீரென சந்தித்த சந்தர்ப்பத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு பதவி விலக தேவையில்லை, மைத்திரி பெரும்பான்மையை நிரூபித்து பதவியில் இருந்து நீக்கும் வரை தொடர்ந்து செயற்படுமாறு ரணில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான உரிமை உள்ளதாகவும், தங்களை பிரதமர் பதவியில் நியமித்த ஜனாதிபதியே அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்க, மஹிந்தவை சந்தித்த போது குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க முடியாமையினால் மஹிந்த பதவி விலகத் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க 123 என்று அறுதிப் பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் பல தடவைகள் நிரூபித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.