நடைமுறை அரசியல் பிரச்சினை! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம் அறிவிக்கப்பட்டது

Report Print Ajith Ajith in அரசியல்

நடைமுறை அரசியல் பிரச்சினைக்கு தீர்வை காண ஆட்சியில் உள்ளவர்கள், பொதுத்தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும் என பௌத்த மதத்தின் மூன்று பிரிவுகளும் தீர்மானம் எடுத்துள்ளன.

அஸ்கிரிய பீடத்தின் பொதுச் செயலாளர் சியமோபலி மஹா நிக்காய மெதகம தம்மானந்த தேரர் இந்த தீர்மானத்தை கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து அறிவித்துள்ளார்.

அதிகாரம் தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இந்தநிலையில் அமரபுர நிக்காய மற்றும் மல்வத்த நிக்காயக்களும், பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக அதன் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.