மீண்டும் மீண்டும் தெரிவிக்கப்பட்டு வரும் விடயம்! ஜனாதிபதி கையில் முடிவு

Report Print Ajith Ajith in அரசியல்

நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பெரும்பான்மை ஆதரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பல தடவைகள் அவர் இந்த கருத்தை வெளியிட்டு வந்த நிலையில் மீண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.

எனவே இந்த விடயத்தில் முடிவை எடுக்க வேண்டியது ஜனாதிபதியின் பொறுப்பாகும் என்றும் அவர் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 7ஆம் திகதியன்று உயர் நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகமாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.