ரவி கருணாநாயக்க கைது? அமைச்சரொருவரின் தகவல்

Report Print Kamel Kamel in அரசியல்

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை கைது செய்ய வேண்டுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், தம்பர அமில தேரர் உள்ளிட்ட 39 பேர் லிற்றோ எரிவாயு நிறுவனத்திடமிருந்து மாதாந்தம் பணம் பெற்று கொண்டதாகவும், இதற்கான உத்தரவினை அப்போதைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பிறப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவல்களை அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ரவி கருணாநாயக்கவை கைது செய்யுமாறு பாதுகாப்பு தரப்பினரிடம் கோருகின்றேன். அரச பணம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தம்பர அமில தேரருக்கு மாதாந்தம் 95,000 ரூபா லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

இரகசிய கணக்கு ஒன்றின் ஊடாக இவ்வாறு 39 பேருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. எனவே ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.