புலனாய்வு பிரிவினரை கடுமையாக சாடிய ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் சம்பந்தமாக உரிய முறையில் புலனாய்வு பிரிவுகளின் அறிக்கைகள் கிடைப்பதில்லை என கூறி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புலனாய்வுப் பிரிவுகளின் பொறுப்பதிகாரிகளை அழைத்து கடுமையாக சாடியுள்ளதாக தெரியவருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளிப்பது குறித்த தகவல்களை முன்கூட்டியே தமக்கு அறிவிக்கவில்லை என்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

அத்துடன் புலனாய்வு துறையினர் ஊடாக தனக்கு ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என அதிருப்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி, அரசியலமைப்பு சட்டத்திற்கு அமைய தானே முப்படைகளின் தளபதி என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

தனக்கு உரிய ஒத்துழைப்புகளை வழங்கவில்லை என்றால், புலனாய்வு பிரிவுகள் குறித்து தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக பேசப்படுகிறது.