உயர் நீதிமன்ற நீதியரசர்களை நியமிக்காது காலம் தாழ்த்தும் ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கி ஒரு மாதம் கடந்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயர் நீதிமன்றத்திற்கான இரண்டு நீதியரசர்களை இன்னும் நியமிக்காது இருந்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவையின் தலைவரான சபாநாயகர் கரு ஜயசூரிய, எஸ்.துரைராஜா மற்றும் ஈ.ஏ.ஜீ.ஆர். அமரசேகர ஆகியோரை உயர் நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்க அனுமதி வழங்கியிருந்தார்.

இந்த விடயத்தில் தலையிடுமாறு விஜித ஹேரத், சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த விடயம் குறித்து ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.