தினேஷ் குணவர்தனவின் இணைப்பதிகாரியான தமிழர் கைது

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் இணைப்பதிகாரியான மகரகமை நகரசபையின் உறுப்பினர் நிஷாந்த விமலசந்திரன், மகரகமை சுதர்ஷனாராம விகாரையில் வசித்து வரும் கொட்டாவே ஹேமாலோக்க தேரரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த பிக்கு தற்போது வைத்தியசாலையில் சிகிக்சை பெற்று வருகிறார். நகர சபை உறுப்பினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மகரகமை நகரசபைக்கு மோட்டார் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு விலகிய பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் குறித்த நபர் தினேஷ் குணவர்தனவினால் நயமிக்கப்பட்டார்.

மகரகமை நகரசபையின் உறுப்பினர் நிஷாந்த விமலசந்திரன் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.