கல்முனை மாநகர மேயர் தன்னிச்சையாக செயற்படுவதாக குற்றச்சாட்டு

Report Print Nesan Nesan in அரசியல்

கல்முனை மாநகர மேயர் தன்னிச்சையாக செயற்படுவதாக கல்முனை மாநகர சபையின் எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நிதி குழு தீர்மானங்களை மாநகர மேயர் ரக்ஹீப் கட்சி சார்ந்து செயற்படுவதை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான ஊடகவியலாளர் மாநாடு நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

இதன் போதே அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமிழர் விடுதலை கூட்டணி கட்சியின் சார்பில் ஒருவரும் மற்றும் சுயட்சிக் குழுக்களுமாக இணைந்து இச்சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர்.

கல்முனை மாநகர சபையில் நடைபெற்ற எட்டு அமர்வுகளும் குழப்பகரமானதாகவே அமைந்திருந்தது. இதனால் மாநகரசபையின் செயற்பாடுகள் சீரான முறையில் அமையவில்லை.

நிதிக்குழு சம்பிரதாயங்களை மீறி சர்வாதிகார போக்குடன் செயற்படுவதாகவும் நிதிக்குழுவில் மாநகர மேயர் கொண்டுவந்த தீர்மானத்தை பெரும்பான்மையை நிரூபித்து காட்ட முடியாமல் கட்சி சார்ந்து செயற்படுவதாகவும் மாநகர சபை கட்டளை சட்டத்தை மீறி செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முதல்வர் அதிகாரத்தை கையிலெடுத்து மாநகர சபை உறுப்பினர்களை மோதவிட்டு தீர்மானங்களை பெரும்பான்மை உறுப்பினர்களது வாக்கெடுப்பின்றி செயற்படுத்த முனைவதனூடாக இவரது சர்வாதிகார போக்கை அறிய முடிகின்றது.

மக்கள் நலனுக்காக அரசியல் பாகுபாடுகளை களைந்து புரிந்துணர்வுடன் முதல்வர் செயற்பட முனைய வேண்டும் அத்தோடு தங்களுக்கு ஆதரவாளர்களின் நிலுவையிலுள்ள வரியினை அறவிடாதிருப்பது பொருத்தமான விடயம் அல்ல என்பதனையும் எடுத்துக் கூறியிருந்தனர்.