என்னால் வழங்கப்பட்ட நியமனங்கள் சட்டரீதியானவை: ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

அரசியலமைப்புச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், அந்த நியமனங்கள் சட்டரீதியானது எனவும் அதில் எந்த சிக்கல்களும் இல்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டிற்குள் எப்படியான அரசியல் பதற்ற நிலைமை ஏற்பட்டாலும் தமது அமைச்சுகளில் கடமைகளை சரியாக செய்து நாட்டின் சகல துறைகளையும் தொய்வின்றி நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு அமைச்சின் செயலாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று நடைபெற்ற சமூர்த்தி திணைக்களத்தில் நிரந்தர நியமனங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை காரணாக நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது.

பொது சேவைகள் ஸ்தம்பிக்க இடமளிக்காது, பொறுப்பை சரியான முறையில் நிறைவேற்றுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.