ரணிலுக்கு தேவையான பதவி பற்றி எஸ்.பி. திஸாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேவை பிரதமர் பதவியல்ல எனவும் கட்சியின் தலைவர் பதவியை காப்பாற்றிக்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற வேண்டும் என்பதே அவரது தேவை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கினிகத்தேன பிரதேசத்தில் இன்று மஸ்கெலியா தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

20 வருடங்கள் நாட்டில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்த தேர்தலின் பின்னர் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எத்தனை பேச்சுவார்த்தைகளை நடத்தினாலும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்படும் வரை எந்த தீர்மானத்தையும் எடுக்கமாட்டார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின்னர் பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டுமாயின், தேர்தல் நடத்தப்படும்.

வழக்கு தொடர்ந்தவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டால், மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் இரண்டு வருடங்களுக்கு பிரதமராக இருந்து ஆட்சி செய்வார் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.