நாட்டை பிளவுப்படுத்தவே கூட்டமைப்பு ஐ.தே. முன்னணிக்கு ஆதரவளித்துள்ளது - கெஹெலிய

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டை பிளவுப்படுத்தும் சமஷ்டி அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வருவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு “செட் அப்” எதிர்க்கட்சியாக செயற்பட்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியது.

தற்போது வெளிப்படையாக எழுத்து மூலம் அறிவித்து ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கியுள்ளது.

நாட்டை பிரிக்கும் சமஷ்டி அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வந்து குரல் சத்தத்தில் நிறைவேற்றி சட்டமாக்கும் சதித்திட்டமும் நடக்கலாம்.

நாட்டை பிளவுப்படுத்த புலிகளுக்கு ஆதரவான பிரிவினைவாத சக்திகள் எவ்வளவு முயற்சித்தாலும் பிரதமர் மகிந்த ராஜபக்ச அதனை நாடாளுமன்றத்தில் கட்டாயம் தோற்கடிப்பார்.

ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதை அடுத்து அந்த கூட்டமைப்புகள் பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளன.

வடக்கு மக்களும் இந்த தீர்மானத்தை ஆதரிக்க மாட்டார்கள் எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.