லண்டனில் இறந்த மகளின் தந்தை இலங்கையில் இப்படியொரு அரசியல்வாதியா?

Report Print Vethu Vethu in அரசியல்

சமகாலத்தில் இலங்கை அரசியல் மட்டத்தில் மிகவும் பிரபலமான நபராக சபாநாயகர் கரு ஜயசூரிய மாறியுள்ளார்.

அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அதனை கட்டிக்காக்கும் பிரதான கதாபாத்திரமாக அவர் விளங்குகிறார்.

இதன் காரணமாக பல்வெறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதுடன், கடுமையான விமர்சனங்களுக்கும் உள்ளாகி உள்ளார்.

இந்நிலையில சபாநாயகர் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அரசாங்கத்தின் மூலம் கிடைக்கும் சம்பளத்தை அவர் தனக்காக பெற்றுக்கொள்வதில்லை. அவரது சம்பளத்தொகை மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு வழங்கப்படுகிறது.

மிகவும் படித்த நபரான கரு ஜயசூரிய, தேர்தல் களத்திலும் மிகவும் எளிமையாக செயற்பட்டு வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 15 வருடத்துக்கு மேலாக போஸ்டர்கள், பதாதைகள், கட்அவுட்களை பயன்படுத்தாமல் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.

சபாநாயகரின் மகள் ஒருவர் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்த நிலையில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தார்.

அவர் உயிரிழந்த போதும் இன்றும் உலக மக்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறார். அவரை உலகின் சிறந்த தாயாக பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உயிருக்கு போராடிய போதும் ஒரு குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுத்தார் என்பது அவரின் பெருமைக்கு காரணமாகும்.